Skygain News

திருவெண்ணெய்நல்லூர் அருகே 4வது முறையாக மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமபொதுமக்கள் போராட்டம்…

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாதிமங்கலம் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள 70 ஆண்டு பழைமை வாய்ந்த எல்லீஸ் அணைக்கட்டு உடைந்து பழுது காரணமாக தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் எல்லீஸ்சத்திரம் அணைகட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது ஆனால் இதுவரை மழையின் காரணமாக அனை சீரமைக்கப்படவில்லை இதனால் ஏனாதிமங்கலம், எரலூர்,செம்மார், பேரங்கியூர்,கப்பூர், உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு விவசாயம் பாதிக்கும் அவங்களை உள்ளன மேலும் கொடுமை பஞ்சம் ஏற்படும் நிலைமை உள்ளதால் மணல் குவாரி வேண்டாம் என வகுப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மீண்டும் தற்போது எல்லீச்சத்திரம் அணை பகுதியில் நான்காவது முறையாக மணல் குவாரி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஏனாதிமங்கலம் ஊராட்சி மன்றம் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு நிலை உள்ளது. மணல் குவாரி அமைக்கவே கூடாது என ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More