Skygain News

விநாயகர் சதுர்த்தி – மதச்சார்புடைய பகுதிகள், கல்விக்கூடங்கள் அருகே சிலை நிறுவக்கூடாது..! அரியலூர் ஆட்சியர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஆட்சியர் ரமண சரஸ்வதி பேசியதாவது, விநாயர் சிலை முற்றிலும் களிமண்ணால் உருவாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். வண்ணப்பூச்சுக்கள் முற்றிலும் இயற்கையான வகையிலும், நீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். சிலையின் மொத்த உயரம் அடிப்பகுதியில் இருந்து 10 அடிக்கு மேலாக இருத்தல்க்கூடாது. சிலையானது நிறுவுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடமானது இதர மதச்சார்புடைய பகுதியாகவும், மருத்துவமனைப் பகுதியாகவும், கல்விக்கூடங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் இருக்கக்கூடாது. விழா அமைப்பினர், பொது அமைதி, பாதுகாப்பு, பொது சட்டம் ஒழுங்கு மற்றும் மதநல்லிணக்கம் சார்ந்த நேர்வுகளில் அவ்வப்போது வருவாய்த்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிக்கும் இதர நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்.

தீயணைப்பு துறையினர், பந்தல் அமைக்கப்பட்டு உள்ள பகுதிகள், மின் இணைப்பு உள்பட அனைத்து நேர்வுகளையும் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு என்ற வகையில் தல ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். விநாயாகர் சிலைகள் கொண்ட ஊர்வலமானது நண்பகல் 12 மணிக்கு முன்னதாக கிளம்பி, காவல் துறையினரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒப்புகை பெற்ற வழித்தடங்கள் வழியாக, சிலை கரைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு உரிய வானத்தின் மூலமாக செல்ல வேண்டும். சிலைகளை நான்கு சக்கர வாகனங்களில் (mini Lorry / tractor)மட்டுமே கரைக்கும் இடத்திற்கு எடுத்து செல்லும் வாகனமாக பயன்படுத்த வேண்டும். மாட்டுவண்டி, மீன்கூடை ஏற்றும் வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவ வகைகள் பயன்படுத்தி சிலையினை எடைக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி சிலை எடுத்துச் செல்லும் வாகனத்தில் நிர்ணயித்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். வெடி பொருட்களை சிலை எடுத்தும் செல்லும் ஊர்வலத்தின்போதோ, சிலை நிறுவப்பட்ட இடத்திலோ வெடித்தல் கூடாது.வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள், மாலைகள், துணி வகைகள் மற்றும் அலங்கார பொருட்கள் அனைத்தும் சிலையானது நீர் நிலைகளில் கரைப்பதற்கு முன்பாக கட்டாயம் அப்புறப்படுத்த வேண்டும்.மேலும், அரியலூரில் விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More