இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் மூன்று அரை சதங்களை பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்து, இந்தியாவை அசாத்தியமான வெற்றிக்கு வழிநடத்தினார்.
இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களை சந்தித்தார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த கோலிக்கு ரன்கள் அடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது, ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகியபோது, தனக்கு ஆறுதல் அளித்து மெசேஜ் அனுப்பிய ஒரே நபர் எம்எஸ் தோனி மட்டுமே என்று கோஹ்லி தெரிவித்திருந்தார்.இதுகுறித்து பேசிய கோலி, தோனி மட்டுமே என்னை தொடர்பு கொண்டார்.

இப்படி ஒரு சீனியரிடம் இத்தனை நெருக்கமாக இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் என நினைக்கிறேன். எங்களின் நட்பு அவ்வளவு சிறப்பாக உள்ளது. அவர் எனக்காக இருக்கிறேன் என்பதை ஒரே மெசேஜில் விளக்கியிருந்தார். அதாவது, ” நீங்கள் மனவலிமையானவர் என நினைப்பவர்களும், அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கேட்க மறந்துவிடுகிறார்கள்” என குறிப்பிட்டிருந்தார்