டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில் மீண்டும் ஒரு த்ரில் வெற்றி கிடைத்தது.இந்த போட்டியில் கடைசி ஓவர் த்ரில், மழை குறுக்கீடு, ஓவர்கள் குறைப்பு என பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறிய போதிலும், விராட் கோலி செய்த சம்பவங்கள் தான் பேசுப்பொருளாகியுள்ளது.
அதாவது வங்கதேச அணி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, விராட் கோலி தனது கைகளில் பந்து ஏதும் இல்லாமலேயே ரன் அவுட் செய்வது போல போலியாக த்ரோ செய்து ஏமாற்றினார். இதனால் ரன் ஓடும் போது தடுமாறினோம் என வங்கதேச அணி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Fake Fielding?😲😲#T20WorldCup #INDvBAN #ViratKohli𓃵 pic.twitter.com/fv3xcRHzPi
— RVCJ Media (@RVCJ_FB) November 3, 2022
விராட் கோலியின் இந்த செயலுக்கு அம்பயர்கள் களத்திலேயே கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் நோ பால் கொடுத்து மொத்தம் 5 ரன்களை பெனால்டியாக கொடுத்திருக்க வேண்டும் என வங்கதேச அணி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் கோலி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.