Skygain News

பல ஆண்டிற்கு பிறகு பந்துவீசி அசத்திய விராட் கோலி..! வைரலாகும் வீடியோ

ஆசியக் கோப்பை தொடரின் 4வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ஆட முயன்ற ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த ஆட்டமிழந்தார். மறுபுறம் தடுமாற்றத்துடன் ஆடி வந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களம் இறங்கிய விராட் கோலி நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். மறுபுறம் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் சூறாவளி போல ஆடி 26 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 68 ரன்கள் குறித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுபுறம் விராட் கோலி 59 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.கலக்கலாக ஆடிய இந்த ஜோடி 42 பந்துகளில் 98 ரன்களை குவித்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்துள்ளது.

இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் பாபர் ஹெயாட் 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 26 பந்துகளில் 68 ரன்கள் சேர்ந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே, ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி பந்துவீசி அசத்தினார். அவர் நேற்றைய போட்டியில் 17வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் வெறும் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். சர்வதேச டி-20கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார். அவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் பந்துவீசினார். இதுவரை 101 டி-20 போட்டிகளில், விளையாடியுள்ள விராட் கோலி 49.5 சராசரியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More