புரட்சி தளபதி விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் சண்டக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தி கொண்டார்.
அதைத்தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களில் நடித்து வெற்றிகண்ட விஷால் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இந்நிலையில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.சூர்யா என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகை ரித்து வர்மா நடித்து வருகிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் அதாவது 1970-களில் நடப்பது போன்றும், தற்போதைய கதைக்களத்திலும் உருவாகிறது. விஷால் இந்தப் படத்தில் முற்றிலும்மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஷால் முதன்முறையாக தாடியுடன் காணப்படுகிறார். மேலும் நெத்தியில் பட்டை, கையில் துப்பாக்கி என மாஸ் காட்டுகிறார்.
இன்று விஷால் பிறந்ததினம் என்பதால் அவருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரீட் ஆக இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.விஷாலின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மார்க் ஆன்டனி திரைப்படம் அவரை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது