Skygain News

தளபதி 67 படத்தில் நடிக்க விஷால் வாங்கவுள்ள சம்பளம்..அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கின்றார்.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

என்னதான் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் படத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்நிலையில், தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க விஷால் கேட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஹீரோவாக நடிக்க ஒரு படத்துக்கு 15 கோடி வரை சம்பளமாக வாங்கும் விஷால், தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More