அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கின்றது.இதையடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏ.கே. 62 படத்தை அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அஜித் என்று கூறப்படுகிறது. முன்னதாக அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.

அவர் தற்போது கூறியிருக்கும் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.விஷ்ணுவர்தன், அஜித் கூட்டணி வெற்றிக் கூட்டணி. அதனால் ஏ.கே. 63 படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்