Vivo T1x ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்பசங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விவோ சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்தியாவில் விவோ செல்போன்களுக்கென மிகப் பெரிய சந்தையை கொண்டுள்ளது. இதேபோல் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது புது மாடல்களை விவோ நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது . அந்த வகையில் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 12 மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 11,499 (4GB,64GB) ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளியீட்டு விழாவையொட்டி விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதாவது இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 680 SoC புராசஸருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபுல் ஹெச்டி தொடுதிரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 90Hz புதுப்பித்தல் திறனும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் அடங்கும். இதேபோல் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு 18 வால்ட் வேகமாக சார்ஜிங் ஏறும் சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.