கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனது கணவர் ஹேமந்துடன் சென்னைய அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்துதான் காரணம் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சித்ரா தற்கொலைக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் சில அரசியல் புள்ளிகள் இருப்பதாகவும் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் சித்ரா தற்கொலை குறித்து வழக்கு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
இடையில் சில காலம் மௌனமாக இருந்த ஹேமந்த் இப்போது சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கூற நான் தயார், எனக்கு முதல்லி போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி வந்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சித்ராவின் கணவரான ஹேமந்த், சித்ரா தற்கொலைக்கும் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரக்ஷனுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.தற்போது இவர் பேசியது செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது