Skygain News

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதி என மொத்தம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 19 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 89 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் 89 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்கள். நிகழ்ச்சி 88 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது ‘ஆம் ஆத்மி’. இந்த 89 தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். இதில் 339 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் என்பதும் 70 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 3311 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More