Skygain News

கமலை சந்தித்த சிம்பு பட தயாரிப்பாளர்..அதுதான் காரணமா ?

சிம்பு மாநாடு படத்திற்க்கு பிறகு கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தைத்தொடர்ந்து தற்போது ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து கௌதம் மேனன் மற்றும் சிம்பு களமிறங்கியுள்ளனர்.

முந்தைய படங்களை காட்டிலும் சற்று வித்யாசமான படமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது டீசரை பார்க்கும்போதே தெரிகின்றது. இந்நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ட்ரைலர் & இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரபல தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான மேடையில் இவ்விழா நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கமலை நேரில் சந்தித்து இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘வெந்து தணிந்தது காடு’ படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.