பல நூறு ஆண்டுகளாக நம்மை ஆண்டு வந்த வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர காற்றறை சுவைக்க அரும்பாடு பட்ட தியாகிகளில் ஒருவர் வ. உ. சிதம்பரனார் .
வெள்ளையர்களின் கப்பல்களுக்கு போட்டியாக முதல் இந்திய கப்பல் நிறுவனத்தின் மூலம் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை மேற்கொண்டார் வ.உ.சி .

இதன் காரணமாக கோபம் கொண்ட ஆங்கிலேய அரசு அவரை தேச துரோகியாக குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தது . தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் ,சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
நம் பார்த்த நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டதுடன், மற்றவர்களையும் பங்கு கொள்ள இவர் முக்கிய காரணமாக இருந்தார். இவருக்கு கப்பலோட்டிய தமிழன் என்ற புனை பெயரும் உண்டு . நாட்டுக்காக போராடி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது : சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம் ! தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்!
— M.K.Stalin (@mkstalin) September 5, 2022
தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்! pic.twitter.com/CtMBOFHFox