2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு கேப்டன் பதவியை ஏற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் ஸ்மித் தண்டனையை குறைத்து அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
இந்த சமயத்தில்தான் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டனான ஆரோன் பிஞ்ச், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து புதிய கேப்டன் யார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்தது. இதனால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை மறு பரிசீலனை செய்யுமாறு டேவிட் வார்னர் கூறியிருந்தார்.டேவிட் வார்னரின் இந்த கோரிக்கையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வார்னர், நான் ஒன்றும் கிரிமினல் கிடையாது. அனைவருக்கும் தண்டனையை எதிர்த்து கேட்க உரிமை இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தடை போன்ற தண்டனைகள் மிகவும் கடுமையானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இந்த நடவடிக்கை எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது .

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இப்படி இழுத்தடிப்பது என்னை மட்டுமல்லாமல் எனது குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது. இதிலிருந்து நாங்கள் விடுபட விரும்புகிறோம். புதிய கேப்டனாக என்னை நியமித்தார்கள் என்றால் நான் நிச்சயம் அந்த பதவியை சிறப்பாக செய்வேன் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.