நியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி மிடில் ஓவர்களில் தடுமாறிய போதும், மிடில் ஓவர் பார்ட்னர்ஷிப்பால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது.
இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் உள்ளே வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் எதிரணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். முதல் 3 பந்துகளை நிதானமாக சிங்கள் அடித்து கவனித்த அவர், அடுத்து பிரமாண்ட சிக்ஸருடன் தனது ஆட்டத்தை தொடங்கினார்.
Washington Sundar magic with bat. pic.twitter.com/NBlnO0iBvD
— Johns. (@CricCrazyJohns) November 25, 2022
அவரை சாதாரணமாக எடைப்போட்ட நியூசி, பவுலர்களுக்கு அதன்பின் தான் தலைவலியே ஏற்பட்டது.அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்ஸர்கள் என கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். மொத்தமாக வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் இந்தியா மிகவும் எளிதாக 306 ரன்களை குவித்தது