இந்திய அணி தற்போது T20 உலகக்கோப்பைக்காக தயாராகி வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பௌலர் பும்ரா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பும்ராவுக்கான மாற்று வீரராக யாரை சேர்க்க வேண்னும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
அதில், ‘‘நாங்கள் அனைவரும் அவரை கவனித்தீர்களா? உம்ரான் மாலிக் தொடர்ந்து சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். அயர்லாந்து தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார் எனக் கூறி அவரை புறக்கணிப்பது சரியாக இருக்காது. அயர்லாந்து தொடரின்போது பிட்ச்கள் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது.

அனைத்து பௌலர்களும்தான் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்’’டி20 கிரிக்கெட்டில் ஒரு பௌலர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது சாதாரணமானது. நான் இந்திய அணித் தேர்வுக்குழுவில் இருந்திருந்தால், உம்ரான் மாலிக்கை அதிக போட்டிகளில் விளையாட வைத்து, நிச்சயம் இவரைத்தான் பும்ராவுக்கான மாற்று வீரராக சேர்த்திருப்பேன் என்றார் வாசிம் அக்ரம்