இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தற்போதைய இந்திய அணியின் மீது தன் கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார் வாசிம் ஜாபர்.
அவர் கூறியதாவது, தோனி கேப்டனாக இருந்தபோது நடுவரிசையில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ப்ரோமோஷன் செய்தார்.இதன் பிறகு நடந்தது வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா அதே போல் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
தொடக்க வீரராக ரிஷப் பண்ட்டை ப்ரோமோஷன் செய்ய வேண்டும். டி20 ஒருநாள் போட்டிகளில் பண்ட் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இறங்கினால் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும் என்று அவர் கூறினார். இதேபோன்று ரோகித் சர்மா தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஒரு காலத்தில் ரோகித் சர்மா நடு வரிசையில் விளையாடி நன்றாக செயல்பட்டு இருக்கிறார்.ஆனால் கடந்த பல வருடங்களாக ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி வரும் நிலையில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.