Skygain News

மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!

தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மணிமுக்தா நதி பாசனத்திற்கு தண்ணீர்
அணையிலிருந்து இன்று முதல் திறந்துவிடப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மணிமுத்தா அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.


இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழைய 1243 ஏக்கர் நிலங்களும் மற்றும் புதிய பாசனப்பரப்பு 4250 ஏக்கர்
நிலங்களும் மொத்தம் 5493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது மேலும், பழைய பாசனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம்
வட்டத்தில் 7 கிராமங்களும், புதிய பாசனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் வட்டத்தில் 10 கிராமங்களும் பயனடைகிறது

தற்போதைய நீர் இருப்பை கொண்டு 61 நாட்களுக்கு 25 கன அடி வினாடி பழைய பாசனத்திற்கும், 85 அடி / வினாடி புதிய
பாசனத்திற்கும் தண்ணீர் வழங்க இயலும் மேலும் நீர் வரத்திற்கேற்ப பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

புதிய பாசனம் மூலம் பயன்பெறும் கிராமங்கள் அகரகோட்டாலம், அணைக்கரை கோட்டாலம், வாணியந்தல், தண்டலை,
பெருவங்கூர், வீரசோழபுரம், மாடூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர் மற்றும் இதேபோல் பழைய பாசனம் மூலம் பயன்பெறும் கிராமங்கள்
பல்லகச்சேரி, சூளாங்குறிச்சி, சித்தலூர், உடையநாட்சி, கூத்தக்குடி, பானையங்கால், கொங்கராயபாளையம் ஆகிய கிராமங்கள் பயனடைகின்றன. மேலும் இதனால் நீர்ப்பிடிப்பு அணைக்கட்டுகள். பல்லகச்சேரி அணைக்கட்டு, பாணயங்கால் அணைக்கட்டு, கொங்கராயபாளையம் அணைக்கட்டு, கூத்தக்குடி அணைக்கட்டு ஆகியவர்களை நீர்ப்பிடிப்புகள் அதிகரிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசனம் கார்த்திகேயன் உதயசூரியன் மணி கண்ணன், பொதுப்பணித்துறையினர் என பலர் உடன் இருந்தனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More