தண்ணீர்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும்.
ஐஸ் பேக், பேண்டேஜ்: காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம்.
கால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம்.
மது அருந்தக் கூடாது: மது அருந்தினால் உடலில் இருக்கும் நீரை வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் யோசிக்காமல் மருத்துவரை அணுகவும்.
கல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.