சன் டிவியின் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லாசெல்லஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. நயன்தாராவின் ஐரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய அவருக்கு சன் டிவியில் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளைத் தோல் நடிகைகள் பல நாடகங்களிலும் படங்களிலும் லீடு ரோலில் நடித்து வரும் நிலையில், கருப்பும் கலர் தான் என சன் டிவி சீரியலில் சுந்தரியாக லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கேப்ரில்லா.
இந்நிலையில், தற்போது அவர் ஜாக்கெட் அணியாமல் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

ஜாக்கெட் அணியாமல் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக, ”எனது ஆடையை வைத்து தான் எனது குணத்தை நீ மதிப்பிடுவாய் என்றால் அத்தகைய தேர்வில் நான் தோற்றாலும் மகிழ்ச்சியே’ என பதிவிட்டு தனது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

மேலும், இன்னொரு போஸ்ட்டில், ‘சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம் , சுருங்கிய பின்பும் தொடரட்டும் எனது சுதந்திரம்’ என செம போல்டாக தத்துவங்களை பதிவிட்டு வருகிறார் கேப்ரில்லா செல்லஸ்.