தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதி அருகே ஆசிரமம் அமைத்து தனது ஆன்மீக பேச்சு திறனால் உலக அளவில் பல கிளைகள் வைத்து வேர்ல்ட் பேமஸ் சாமியாராக உருவெடுத்தார் .
எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க ரஞ்சிதாவுடனான மன்மத லீலையில் ஆதாரத்துடன் சிக்கி சிறைச்சாலை சென்றார் .
பாலியல் புகார் மட்டுமல்லாது மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அவர் நியமிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையானது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மடங்களில் தனது ராஜ்ஜியத்தை பரப்ப நினைக்க அவருக்கு அடிமேல் அடி விழுந்தது .

இதுபோன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் கர்நாடக காவல்துறை இவரை தீவிரமாக தேடி வருகிறது. தமிழகத்திலும் இவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதையடுத்து கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அவரே தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தா நோய்வாய்ப்பட்டு இருப்பதாக புகைப்படங்கள் வெளிவந்தன.
தனக்கு நானூருக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களால் தனக்கு என்ன வியாதி என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னை நோய் கடுமையாக வாட்டுகிறது என்று அவரே தொடர்ந்து பக்தர்களுக்கு கடிதம் எழுதி வந்தார்.

அண்மையில் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று இலங்கை அரசிடம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இலங்கைக்கு வர அனுமதி கோரி இருந்தார் நித்தியானந்தா.
ஒருபக்கம் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு சொந்தமான சொத்துக்கள் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி இருப்பதாகவும் கூறப்படுகிறது . இதனால் அவருடன் உள்ளவர்களே அந்த சொத்துக்களை அனுபவிக்க நித்தியானந்தாவை கொல்ல முயற்சித்துள்ளனர் என்றும் அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் .உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.