Skygain News

மருத்துவர் கண்டறிந்த அறிய விஷயம் : பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள்..!

ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்நகர் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால் அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.

அதன்படி குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன பின்னர் நவம்பர் 1ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது . அந்த கட்டியை எடுத்த போது அது நீர்க்கட்டி போல் இருந்துள்ளன. மருத்துவர்கள் அதை பரிசோதித்த போது அந்த நீர்க்கட்டிக்குள் 8 கருக்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு கருவும் 3 முதல் 5 சென்டிமீட்டர் வரை இருந்திருக்கின்றன.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அந்த குழந்தை அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

மருத்துவ உலகின் அரிய நிகழ்வாக பிறக்கும் குழந்தையின் வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகும். பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் இது போன்று உருவாகும் என்று ஆய்வுகள் உள்ளன. ஆனால் பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் உருவாகி இருந்தது இதுதான் முதல் முறை. இதை மருத்துவ உலகின் மிக அரிய நிகழ்வு என்று தெரிவித்திருக்கிறார் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இம்ரான்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More