இந்து மதத்தையும் இந்து பெண்களையும் பற்றி தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரை கண்டித்தும் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது.
இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு காலாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் புதுச்சேரி உப்பளம் இமாக்குலேட் பெண்கள் மேல்நிலை தனியார் பள்ளி வழக்கம் போல் இயங்கியது.
இது குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த பாஜக கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம் பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியை மூடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . அப்போது அங்கு வந்த பெற்றோர்கள் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேற மாறு கோஷமிட்டவாரே அவர்களை பள்ளி வளாகத்தை விட்டு விரட்டியடித்தனர். திடீரென பெற்றோர்களுக்கும் இந்து முன்னணி பாஜக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது