ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் புதிய சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இத்தொடரில் இன்னும் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தால் டெஸ்ட் உலகில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெறுவார். இச்சாதனையை ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் மற்றும் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவர் மட்டுமே கைவசம் வைத்துள்ளனர்.
