உச்சநீதிமன்ற உத்தரவிலிருந்து சிறிதும் வழுவாமல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் குறித்து, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பக் கடிதங்களை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழ்மகன் உசேன் சமர்ப்பித்தார். பின்னர் பேசிய அவர் தேர்தல் பரப்புரையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பது பற்றி அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.
