நீட் தேர்வு குறித்த ரகசியத்தை, உதயநிதி வெளியிடுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த நிகழ்வில், அவர் வெளியிடப்போகும் திட்டங்கள் குறித்து கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கல்விக் கடனை திமுக அரசு ரத்து செய்யாமல் இருந்து வரும் நிலையில், அந்த அறிவிப்பை உதயநிதி வெளியிடுவாரா என உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
