Skygain News

தமிழகத்தில் உள்ள 4,634 நூலகத்திற்கு பராமரிப்பை மேம்படுத்துவதற்கு செயல்படுத்திட முன்வருமா?   ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

தமிழகத்தில் இன்று நூலகங்களின் பராமரிப்பும் ,மேம்பாடும் கவனிப்பார் இன்றி இருப்பது கவலைக்குரிய நிலையில் உள்ளது. தகவல் ,எழுத்தறிவு ,கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலக சேவையானது பல்வேறு இலக்குகளை உள்ளடக்கியதாக செயல்பட்டு வருகிறது.

 குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்தல், அனைத்து தரப்பினருக்கும் சுய கல்வி மற்றும் முறையான கல்விக்கு துணைநிற்றல், தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞருடைய கற்பனை மற்றும் படைப்பாற்றலை தூண்டுதல், பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் கலைகள் அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல், அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல் இது தான் பொது நூலக சேவையினுடைய பல்வேறு இலக்குகளை கொண்டு இருக்கிறது.

 4,634அதிகமான நூலகத்தை தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன, தற்போது அனைத்து பிரிவினராலும் பயன்படுத்தப்படுவதில்லை என்கிற ஒரு அதிர்ச்சிகரமான தகவல் இன்றைக்கு நம்முடைய கோரிக்கையை முக்கிய அங்கமாக இருக்கிறது, நூலக பயன்பாட்டையும் வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிப்பதற்காக நூலக நண்பர்கள் திட்டத்தை 2022-2023 பட்ஜெட் கூட்டத்தில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார் .

 நூலக நண்பர்கள் திட்டம்  அன்றைக்கு பட்ஜெட் கூட்டத்துடன் அறிவித்த அதனுடைய செயல் வடிவம் என்ன ஆயிற்று என்று இன்றைக்கு மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், மூத்தவர்கள், முனைவர்கள், நூலக வாசிப்பாளர்கள் இதை ஒரு கேள்வியாக இந்த அரசுக்கு முன் வைத்து வருகிறார். தற்போது  பெரும்பாலான நூலகங்களிலே பராமரிப்பு கேள்விக்குறியாக இருக்கிற காரணத்தினால் அதனுடைய பயன்பாடு குறைந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

புதிய நூலகங்கள் கட்டப்படுவதற்கு இணையாக அல்லது அதற்கு பதிலாக ஏற்கெனவே இருக்கும் நூலகங்களை பராமரிப்பதிலும்  அரசு கவனம் செலுத்த முன்வருமா என்பதுதான் இன்றைய பிரதான கேள்வியாக இருக்கிறது.  மதுரை மாவட்ட சிம்மக்கல் மைய நூலகம் கூட இன்றைக்கு பராமரிப்பு,பயன்பாடு குறைந்து இருக்கிறது,ஆனால் மதுரையிலே முதலமைச்சர் தனது தந்தையார் பெயரிலே ரூபாய். 114 கோடியிலே நூலகம் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டார் மதுரையிலே இந்த பகுதியிலே கடந்து செல்லுகிற அத்தனை அமைச்சர்களும், அந்த நூலகத்தை சென்று பார்த்து அந்த கட்டிடப் பணிகளை தொடர்ந்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

 மதுரை சிம்மக்கல் நூலகத்தை தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் பெருமக்கள் என்றைக்காவது ஆய்வு செய்தார்களா, இதுபோன்றுதான் தமிழ்நாட்டிலே இருக்கிற 4634 அந்த நூலகங்களுடைய பராமரிப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.  அதேபோல் இன்றைக்கு  நூல்களை தேடி எடுத்து கொடுக்கும் திறன் படைத்த நூலகர்கள் அனைத்து நூல்களிலும் இருக்கிறார்களா இருப்பதற்கு உறுதி செய்ய இந்த அரசு முன்வருமா ?

நூலகங்களிலே அமர்ந்து வாசிப்பதற்கான இருக்கைகள், மேசைகள், ஒளிஅமைப்பு ,காற்றோட்டம் உள்ள தூய்மையான மற்றும் தூய்மையான அறைகள், சுகாதாரமான குடிநீர், அதே போன்று தூய்மையான கழிப்பறை வசதிகள் ஆகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை இந்த அரசு உறுதி செய்வதற்கு முன் வருமா ?

மதுரையிலே முதலமைச்சர்  தந்தையார் பெயரிலே 114 கோடியிலே நூலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டு, 2 லட்சம் சதுர அடியில் இன்றைக்கு பொதுப்பணித்துறை குடியிருப்பில் 99 கோடியில் நூலக கட்டிடமும், நூலகத்திற்கு நூல்கள் இணையவழி, பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல்

 செய்ய 10 கோடியும், தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு 5 கோடி என 114 கோடி  முக்கியத்துவம் அளித்துள்ள  தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள 4634 நூலகத்திற்கும் இதே பராமரிப்புக்காக, பயன்பாட்டிற்கான, ஆய்வுக் கூட்டங்கள், அனைத்து நூலகங்களின் பயன்பாட்டை பராமரிப்பை மேம்படுத்துவதற்கு இந்த அரசு செயல்படுத்த முன்வருமா? என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More