விழுப்புரம் தனியார் மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பட்டியலிடம் மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குறித்து கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, மகளிர் அவர்கள் சுயமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக முதலமைச்சர் பெரியார் வழியில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அளித்த ஒரே முதலமைச்சர் என பெருமதமாக பேசினார் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த ஊராட்சி எண்ணிக்கை 688 என்றும் அதில் பாதி 344 அதிலும் 50 சதவீதம் ஊராட்சி தலைவர்களில் 401 பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஆக விழுப்புரத்தில் தேர்தலில் ஜெயித்து வந்துள்ளனர். இது நம்ம மாவட்டத்திற்கு பெருமை என்றும் மேலும் மகளிர் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் சமுதாயத்தில் புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் தைரியமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் ஆகிய திராவிட வழியே மாடலில் தற்பொழுது 33 சதவீதத்தில் இருந்து பெண்களுக்கு 50 சதவீதமாக உயர்த்தி தந்த தலைவர் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் என பெருமையாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் எம் பி ரவிக்குமார் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.