உலக பார்வை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக பார்வை தினம் அக்டோபர் 13ஆம் தேதி ஆன இன்று கடைபிடிக்கப்படுகிறது. பார்வையின்மை மற்றும் பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நாளாக ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு இந்நாளை கடைப்பிடித்து வருகிறது.

நம் உடலில் முக்கிய மான உறுப்புகளில் ஒன்று கண். இந்த கண் மூலமாகவே நம் உலகத்தை காண்கிறோம் இதுவே நமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக அமைந்துள்ளது. இந்த உலகத்தில் சுமார் 2.2 பில்லியன் மக்களுக்கு அருகில் அல்லது தொலைதூரத்தில் இருப்பது சரிவர தெரியாத வகையில் பார்வை குறைபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. லேப்டாப், ஃபோன் , டிவி என அனைத்தையும் பார்ப்பதால் நம் கண்கள் கஷ்டப்பட்டு ஓய்வில்லாமல் பாதிப்படைகிறது. இதனால் நம் கண்களுக்கு தகுந்த ஓய்வினை நாம் அளிக்க வேண்டும்.
கண்களை பாதுகாக்க இதை செயுங்கள் :

- கண்கள் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்
- உணவில் கூடுதல் பச்சை காய்கறிகள் மஞ்சள் மற்றும் சிவப்பு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
- அதே சமயம் கண்புரை, கண் நரம்பு சிதைவு, விழித்திரை புள்ளி சிதைவு ஆகியவற்றிற்கு ஆகியவற்றை தடுக்கும் வகையில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது இவற்றிற்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக பார்க்கப்படுகிறது.
- சூரிய கதிர்களின் புற ஊதா கதிரில் இருந்து காக்க குளிர்கண்ணாடியை அணிவித்துக் கொள்ளலாம்.
- ஆபத்தான பணிகளில் செய்யும்போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும
- 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
- கண்களை தேய்க்கும் அல்லது தொடும் போது கைகளை கழுவ வேண்டும்.
- கண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் நேரடியாக மருந்து கடைகளில் இருந்து மருந்து வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
- உடல் பயிற்சி உடலுக்கு மட்டுமல்லாமல் கண்ணுக்கும் நல்ல பயனை அளிக்கும்.