ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் இதனை கண்டித்து ஈரானில் உள்ள குர்திஷ் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் ஆக்கிரமிப்பு குர்திஸ்தானில் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அந்த இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது . இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து குர்திஷ் மனித உரிமைகள் அமைப்பான ஹெங்காவைச் சேர்ந்த சோமா ரோஸ்டமி கூறுகையில், “பதற்றத்தைத் தடுக்க எந்த சடங்கும் இல்லாமல் இறுதிச் சடங்கு நடத்த அமினி குடும்பத்தை அரச படைகள் கட்டாயப்படுத்தியது. அரச படைகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான மக்கள் அமினியின் சொந்த ஊரான சாக்வேஸில் அடக்கம் செய்வதற்காக கூடியதாக அவர் கூறினார் .