கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடத்த 30 ஆம் தேதி நடைபெற்ற திருமணத்திற்கு சென்னையில் இருந்து ஐந்து பேர் ஆட்டோவில் வந்திருந்தனர் அதில் உளுந்தூர்பேட்டை அடுத்த விஜயங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் வீரமணி என்பவர் வந்திருந்தார் .
அப்பொழுது அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலப் பகுதியில் பெண்களோடு வீரமணி மற்றும் நான்கு பேர் நடந்து சென்றனர் அப்போது அங்கு இருந்த நிலத்தின் உரிமையாளரான தொப்பையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்கிற சிவராஜ் பெண்களை வயல்வெளி பகுதியில் ஏன் அழைத்துப் போகிறீர்கள் என்று கூறி திட்டி கண்டித்து அனுப்பி வைத்தனர்.
அப்பொழுது அவர்களுக்குள் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு திரும்பிச் சென்றனர் இந்த நிலையில் அன்று மாலை திருநாவலூர் கெடிலம் அருகே உள்ள சேந்தமங்கலம் பெட்ரோல் பங்கில் சிவராஜ் நின்று கொண்டிருந்த பொழுது அங்கு ஆட்டோவில் வந்த வீரமணி மற்றும் அவரது நண்பர்கள் சிவராஜ் பார்த்து காலையில் நம்மிடம் தகராறு செய்தவர் இவர்தான் அவரை சும்மா விடக்கூடாது என்று கூறி சிவராஜியை நோக்கி சென்றனர் .
அப்பொழுது வீரமணி உடன் வந்த இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தி எடுத்துக்கொண்டு ஆட்டோவில் இருந்து இறங்கி சட்டையில் மறைத்தார் இந்த காட்சி பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது தொடர்ந்து சிவராஜ் பார்த்த அவர்கள் சிவராஜ் அசிங்கமாக திட்டி சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த சிவராஜ் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் ஆட்டோவில் இருந்து இறங்கி சிவராஜ்யை வீரமணி நண்பர்கள் வெட்டுவதற்காக பட்டாக்கத்தி எடுத்து மறைத்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..