தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.என்னதான் இவர் ரஜினி மற்றும் கமல் படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.இந்நிலையில் அவர் தன் மனைவி ஜஃப்ரூன் நிஸாருடன் சேர்ந்து மெக்காவுக்கு சென்றிருக்கிறார்.
உம்ரா செய்ய சென்ற யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.யுவன் இஹ்ராம் எனும் வெள்ளைத் துணி அணிந்து பேருந்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகிவிட்டது. இது தவிர்த்து மெக்காவில் எடுத்த செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஜஃப்ரூன் நிஸார்.
Thalaivan @thisisysr latest pic ☪️✨#Yuvan #YuvanShankarRaja pic.twitter.com/pUBM5uToyv
— Ysrclub™ (@ysrhub) October 31, 2022