சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் நடைபெற்ற 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் இந்திய இராணுவ ஆராய்சி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு
பட்டங்களை வழங்கினார்
இந்திய இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர் டாக்டர் வி.பாலகுரு, மற்றும் பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவுக்கு சத்தியபாமா பல்கலை கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் வழங்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஹிப் ஹாப் பாடல்களை அறிமுகப்படுத்யதில் பெருமைக்குரியவராக கருதப்படும் யுவன் சங்கர் ராஜாவிற்கு 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுற்கான தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டது , அவரது இசை பயணத்தை கௌரவிக்கும் விதமாக சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பாக இந்த கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது .