Skygain News

விராட் கோலி படைத்த மிகப்பெரிய சாதனை..குவியும் பாராட்டுக்கள்..!

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலிக்கு கடந்த சில ஆண்டுகளாக போறத காலமாக அமைந்தது. சதம் அடிப்பதில் பெயர் பெற்ற கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை. இப்பொது அடிப்பார் அப்போது அடிப்பார் என்று காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால் இந்த ஏமாற்றத்தை போக்கும் வகையில் விராட் கோலி நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிரிக்கெட் போட்டியில் சதமடித்து தன் தாகத்தை போக்கிக்கொண்டார்.

இந்நிலையில் விராட் கோலி சதமடித்ததன் காரணமாக இந்தியர்கள் மட்டுமல்லாமல் மற்ற நாடு கிரிக்கெட் வீரர்களும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார் கோலி.

நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான கப்திலை பின்னுக்கு தள்ளி கோலி முன்னேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் விராட் கோலி இதுவரை 96 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 32 அரைசதம் உள்பட 3,584 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் ரோகித் சர்மா (3,620), மூன்றாவது இடத்தில் கப்தில் (3,497) ஆகியோர் உள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More